கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நெய் லிட்டருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் முடிவுச் செய்துள்ளது.
வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா… அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!
தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் தேவையை அறிந்து, நெய், வெண்ணெய், தயிர் உள்ளிட்ட ஏராளமான பால் பொருட்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றன. மேலும், பால் உபபொருட்களின் விலையிலும் மக்கள் விரும்பும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
100 கோடி வசூலை அள்ளிய இயக்குனருடன் இணையும் மாதவன்….. டைட்டில் குறித்த அப்டேட்!
இந்த நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஆவின் நெய் தள்ளுபடி விலையில் வழங்கப்படவுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 12- ஆம் தேதி முதல் ஜனவரி 20- ஆம் தேதி வரை ஆவின் நெய் லிட்டர் ஒன்றிற்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.