தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
“புறநகர் ரயில் சேவையை நாளை தொடங்க நடவடிக்கை”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் மைசூரு, பெங்களூரு, திருப்பதி, கோவை, விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 14 விரைவு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மி.கனஅடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 8,514 கனஅடியில் இருந்து 4,166 கனஅடியாகக் குறைந்தது.
“எப்போது தண்ணீர் வெளியேற்றுவார்கள்?”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.