Homeசெய்திகள்தமிழ்நாடுபோகி பண்டிகையில் மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கை குறித்து டாக்டர். கிருஷ்ணசாமி வலியுருத்தல்

போகி பண்டிகையில் மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கை குறித்து டாக்டர். கிருஷ்ணசாமி வலியுருத்தல்

-

- Advertisement -
kadalkanni

போகி பண்டிகையன்று மாசு ஏற்படாமலிருக்க, டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.போகி பண்டிகையில் மாசு கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கை குறித்து டாக்டர். கிருஷ்ணசாமி வலியுருத்தல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அதன் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையின் போது வரும் போகி பண்டிகையன்று பழைய பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுவதை, வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மற்றும் மாசுவிலிருந்து தப்பிக்க, டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை எப்படியாவது ஒன்றிய அரசிடம் பேசி மாநில அரசு தடுத்து நிறுத்திட வேண்டுமென அவர் வலியுறுத்தினார். பட்டியல் இன இட ஒதுக்கீடு விவகாரத்தில்  உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள 18 சதவீதத்தை, வரைமுறைபடுத்தும் வரை, அருந்ததியர்களுக்கான மூன்று சதவீத உள் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டுமென கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார். மாஞ்சோலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவற்றையெல்லாம் முன்வைத்து, ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

நியாய விலைக்கடைகள் நாளை செயல்படும் – தமிழக அரசு!

MUST READ