Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிருவனம் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் மதுரை கிளை...

விஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிருவனம் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

-

- Advertisement -
kadalkanni

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையுடன் நடிகர் விஜய் இருப்பது போன்று புகைப்படம் வெளியிட்ட my India youtube நிருவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

புகைப்படங்களை மார்ஃபிங் செய்து படம் வெளியிட்டது தொடர்பாக புகார் பெற்று விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

விஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிருவனம் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனு. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்  விஜய் மற்றும் பொது செயலாளர் புஸ்லி ஆனந்த ஆகியோர் இரண்டு வருடங்களுக்கு முன் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அவர்களை சந்தித்த புகைப்படத்தை பொய்யாக மார்ஃபிங் செய்து அதில் புதுச்சேரி  முதல்வர் ரெங்கசாமியின் புகைப்படத்திற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை அதில் மார்பிங் செய்து (my India YouTube channel.மை இந்தியா யூட்யூப் சேனல்) சமூக வலைதளங்களில் அந்த போட்டோவையும், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக விஜய் இருப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டது.

இது எங்கள் கொள்கைக்கு எதிராக உள்ள கட்சி தலைமையோடு இணைத்து புகைப்படத்தை வெளியிடுவது மக்கள் மத்தியில் எங்கள் கட்சி மீது உள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும் அந்த youtube சேனலில் விஜய்யை ஆட்டி வைக்கும் பாஜக மொத்தமாக பாஜகவின் ஏஜெண்டாக மாறிய விஜய் என அவதூறான கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்.

விஜய் புகைப்படங்களை மார்ஃபிங் செய்த நிருவனம் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுஇது பொதுவான வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வாக்காளர்களின் மனநிலையை சிதைக்க செய்துள்ளது. எனவே இந்த மை இந்தியா youtube சேனல் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த  வழக்கு இன்று  நீதியரசர் நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிணைய் காஸ் ஆஜராகி மனுதாரரின் கட்சி கொள்கைக்கு சம்பந்தமில்லாத மாற்று கட்சி தலைவரின் புகைப்படத்தோடு இணைத்து யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி உள்ளனர். இது குறித்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி

அரசியல் கருத்தியல் தொடர்பில்லாத நபர்களோடு புகைப்படங்களை மார்ஃபிங் செய்து படம் வெளியிட்டது தொடர்பாக மனுதாரர் வருகின்ற 20.01.25 அன்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புதிய புகார் ஒன்றை கொடுக்க வேண்டும்.

அந்த புகாரின் படி  காவல்துறை ஆய்வாளர் உரிய விசாரணை மேற்கொண்டு இரண்டு மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

MUST READ