பொதுமக்கள் அளித்த தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளாா்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 1105 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளாா்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 1,105 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாவிற்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.38,000 மதிப்பீட்டிலான சிறப்பு சக்கர நாற்காலிகளையும்,
மேலும், மடக்கு ஊன்றுகோல் வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு உடனடியாக ரூ.3,500 மதிப்பீட்டிலான மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடியை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனாா்கள்.
எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி! எஸ்.ரகுபதி கடும் விமா்சனம்….