மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தொடங்கிய நிலையில், முதல் நபராக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் காத்திருந்து தனது வாக்கைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் அஜித்குமார்.
சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!
தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் பாரதிதாசன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு நடிகர் அஜித்குமார் இன்று (ஏப்ரல் 19) காலை 06.30 மணிக்கு வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேண்ட், கருப்பு கண்ணாடி அணிந்திருந்தவாறு வந்திருந்தார். வரிசையில் காத்திருந்த அவர், வாக்குப்பதிவுத் தொடங்கியவுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று தனது வாக்கை செலுத்தினார்.
நடிகர் அஜித்குமார் முதல் நபராக வாக்கை செலுத்தியதன் மூலம், அனைவரும் உடனடியாக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.
‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!
தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.