நடிகர் பாபி சின்ஹா மீதான வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய கொடைக்கானல் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!
தன் மீதான கொலை மிரட்டல் வழக்கை ரத்துச் செய்து உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் பாபி சின்ஹா மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பாபி சின்ஹா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கின் புகார்தாரர் உசேன் மற்றும் நடிகர் பாபி சின்ஹாவிற்கு இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், அதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் வாதிட்டார்.
இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இருவரும் சமரசப் பத்திரத்தை அரசு வழக்கறிஞரிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞரை நியமித்து நீதிமன்றத்தில் அதனை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.