Homeசெய்திகள்தமிழ்நாடு“தமிழ்நாட்டில் முதல்வரின் கால் படாத இடமே இல்லை” - நடிகர் விமல்

“தமிழ்நாட்டில் முதல்வரின் கால் படாத இடமே இல்லை” – நடிகர் விமல்

-

“தமிழ்நாட்டில் முதல்வரின் கால் படாத இடமே இல்லை” – நடிகர் விமல்

முதலமைச்சர் குறித்து புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் அவர் குறித்தான கண்காட்சி வாய்ப்பாக அமைந்தது என நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

Image

திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை யொட்டி ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23 துவங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Image

இந்த கண்காட்சியை நடிகர் விமல் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளிகளிடம் பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலினின் பார்க்காத புகைப்படங்களை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு உழைப்பு தான் காரணம் என்பதை இந்த கண்காட்சி காட்டுகிறது. கலைஞர் அவர்கள் ஸ்டாலினை பற்றி குறிப்பிடும் போது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அது இந்த கண்காட்சியில் புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.

Image

தமிழ்நாட்டில் அவர் கால் படாத இடங்களே இல்லை என்பதும் இந்த கண்காட்சி மூலம் தெரிகிறது. அதனால் கிடைத்த மக்கள் அன்பால் இன்று முதலமைச்சராகி உள்ளார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் குறித்து புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் கூறினார்.

MUST READ