பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.
விழாக்கோலம் பூண்டது முத்தாரம்மன் கோயில் திருவிழா!
இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு எழுதியுள்ள நடிகை கௌதமியின் கடிதத்தில், “கனத்த இதயத்தோடு பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன். பா.ஜ.க. கட்சி வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட் கொடுக்கவில்லை.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை!
அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்துள்ளார். அழகப்பனுக்கு பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் ஆதரவாக இருக்கின்றனர். பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.