Homeசெய்திகள்தமிழ்நாடு"நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?"- நடிகை குஷ்பு பேட்டி!

“நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?”- நடிகை குஷ்பு பேட்டி!

-

- Advertisement -

 

"நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?"- நடிகை குஷ்பு பேட்டி!
Video Crop Image

ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும் போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகையும், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, “வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன்; அதில் தவறில்லை. ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும் போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?

எல்லா மக்களும் சமம்தான்; நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. குடியரசுத் தலைவரைத் தகாத வார்த்தைகளால் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் நான் கண்டனக் குரல் கொடுத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளிக்கட்டும்; நான் பார்க்காத வழக்குகளா? நடிகை திரிஷாவிடம் இருந்து புகார் வந்ததால் தான் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

சேரி என பதிவிட்டது பதிவிட்டது தான்; பயந்துப் பதிவை நீக்குவது, பின்வாங்குதெல்லாம் கிடையாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ