Homeசெய்திகள்தமிழ்நாடு'மின்சார ரயில் சேவை நிறுத்தம்'- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

-

- Advertisement -

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இன்று (அக்.31) காலை 10.18 மணி முதல் மதியம் 02.45 மணி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கீழ்கண்ட வழித்தடங்களில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதேபோல், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

மேற்குறிப்பிட்டுள்ள கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.31) மட்டுமே. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகளை பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ