Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

-

ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் ஆய்வு

ஆவின் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பால் கிடைக்கவில்லை. ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. அதனால் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் பால்வளத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பால் தட்டுப்பாடு இல்லாமல் உரிய நேரத்தில் விநியோகம், தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளப் பிரச்சனை சரிசெய்யப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

மேலும் ஆவின் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  வரும் ஜுன் மாதம் முதல் அவர்களுடைய வங்கி கணக்கில் ஊதியம் நேரடியாக செலுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆவின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
அம்பத்தூர் ஆவின் பால்பண்மைணயில் அமைச்சர் திடீர் ஆய்வு

தொழிற்சாலைக்கு வந்த அமைச்சர் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். தொடர்ந்து பால் உற்பத்தி செய்வது, பேக்கிங் மற்றும் லோடிங் செய்யும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

பணிகள் முடிவு பெற்று பால் விநியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கியதாக கூறப்படுகிறது.

MUST READ