இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1
சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் நெருங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது. அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். அதன்பின் சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது.
அன்றிலிருந்து 125 நாட்களில் எல் 1 புள்ளியை அடைந்து சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்த நிலையில், 9.2 லட்சம் கி.மீ தூரத்தை ஆதித்யா விண்கலம் கடந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் -1 இலக்கை நெருங்குகிறது என்றும் புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.