Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

-

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர், அவரது வழக்கறிஞர்கள் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை சபாநாயகர் ஒப்புதல் அளித்ததின் பெயரில்தான் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 8 ஆண்டுகள் அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்  கடந்த 2017ம் ஆண்டு இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் ,அமலாக்கத் துறையினர்  சோதனை செய்தனர்.அப்போது 89 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனா். அந்த பணம் குட்கா  போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருளின் மூலமாக வருமானமாக கிடைத்தது என்று 2017 ல் தெரிவித்தனா்.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், 2016 முதல் 21 வரை தன் வருமானத்தை விட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனா்.  அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது நடந்த  சோதனையில் 23.85லட்சம் ரூபாய் ரொக்கம் 4.87 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்களின் சான்றுகள் 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் பதியப்பட்ட வழக்கில் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக  35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்பு 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனா்.

மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் சென்னை டி நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு , 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என 800 சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் தான் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தனா். இந்நிலையில் கடந்த 2023 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதுவரை 21 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் 6 முறை விஜயபாஸ்கரும் இருமுறை அவரது மனைவி ரம்யாவும் 15 முறை இவர்களது வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.  22வது முறையாக இந்த வழக்கு  விசாரணைக்கு வந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி இருந்தார். மேலும் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர்களும் லஞ்ச ஒழிப்பு துறையினரும் அரசு தரப்பு வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் ஆஜராயினா்.

அப்போது விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை  என்றும் சபாநாயகர் கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விஜயபாஸ்கர் தறப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனா். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி கிரிஜா ராணி உத்தரவிட்டார்.

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

MUST READ