Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்- எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்- எடப்பாடி பழனிசாமி

-

தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்- எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் விழா, மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

Image

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் அதை எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். அதற்காக நாம் பாடுபட வேண்டும். அம்மாவின் அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொண்டர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையுடன் தலைமை கழகம் அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மீண்டும் அம்மாவின் அரசு தமிழகத்தில் அமைய மீண்டும், ஒரு நல்ல ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் ஆகவே நிர்வாகிகள் கழகத்தின் உடன்பிறப்புகள் தொண்டர்கள் நிர்வாகிகள் ஒருமித்த கருத்தோடு பணியாற்ற வேண்டும்.

Image

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்போது தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் ஆண்டவனாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தேர்தல் நெருங்கிவிட்டது. போர் என்ற யுத்தம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை நாம் சந்திக்க வேண்டும், எதிரிகளை ஓட ஓட விரட்டி புறமுதுகு காட்டி ஓடும் அளவிற்கு நம் பணிகள் அமைய வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று விட்டது என்ற ஒலி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த லட்சியத்திற்காக நாம் அத்தனை பேரும் நம்மை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட வேண்டும்” என்றார்.

MUST READ