Homeசெய்திகள்தமிழ்நாடுஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம்

ஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம்

-

ஊழல் செய்த அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு- ஈபிஎஸ் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..

அதன்பின் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்ததை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும். கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருந்த விஜயகுமாருக்கு ஏன் விடுப்பு வழங்கவில்லை? காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும்.

காவலர் நலவாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான திமுக அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் குறித்து பேச தகுதி கிடையாது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும். ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர் ரகுபதி வசம் சட்டத்துறை இருப்பதே தவறு. 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.” என்றார்.

MUST READ