Homeசெய்திகள்தமிழ்நாடு"சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்"- எடப்பாடி பழனிசாமி!

“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம்‌ இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி, இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ