Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில்

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில்

-

- Advertisement -

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில்

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாத செலுத்தினார். அதனை தொடர்ந்து அவைத் தலைவர் தமிமகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்தியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் அவல நிலைகள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. மக்களாஇ சுரண்டும் ராஜ்ஜியத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்திக்கொண்டிருக்கிறார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்திய பன்னீர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேனா நினைவு சின்னம் வழக்கு விவகாரத்தை திசை திருப்பும் செயலை திமுக செய்து வருகிறது. எம்ஜிஆர் சிலையை பார்த்தால் திமுகவினருக்கு பயம் வருகிறது. சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினாலும் சந்திக்க தயார். ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், சூழலைப் பொறுத்து முடிவெடுப்போம் என்றார்.

MUST READ