அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது!
அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகியும், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 01) காலை 08.00 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பிரபு மற்றும் அவரது தந்தை, சகோதரர் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்த சோதனையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், பிரபு வீட்டில் சோதனை நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க.வினர் அவர் வீடு முன்பு குவிந்துள்ளனர்.