Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

-

 

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
File Photo

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (செப்.13) காலை 07.00 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் சத்ய நாராயணன். இவர் தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணி பக்கம் உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் பதவியையும் வகித்து வருகிறார்.

கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று (செப்.13) காலை 07.00 மணி முதல் தி.நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 18 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

MUST READ