Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியை கைது செய்க- ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை கைது செய்க- ஜெயக்குமார்

-

செந்தில் பாலாஜியை கைது செய்க- ஜெயக்குமார்

ஐடி ரெய்டிற்கு போலீசார் உரிய பாதுகாப்பு தர தவறியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கரூரில் வருமான வரித்துறையினருக்கு பாதுகாப்பு வழங்காத எஸ்பி மீது மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார். திமுக ஆட்சியில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல் செய்துள்ளனர்.

பெரிய ஊழல் திமிங்கலங்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான். சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல். செந்தில்பாலாஜி சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. கரூர் மாவட்ட எஸ்பி மீதும் தவறு இருக்கிறது” என்றார்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த சென்ற போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளின் வாகனங்களை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த விடாமல் திமுக குண்டர்களின் வெறியாட்டம் அத்துமீறல்களில் ஈடுபட்டுவதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டிவருகிறது.

MUST READ