ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது: ஜெயக்குமார்
விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.
இச்சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது. அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கும் அமலாக்கத்துறை சோதனையும் எந்த சம்பந்தமும் இருக்காது. மதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு வள்ளுவர் பெயரை ஏன் வைக்கவில்லை? மக்கள் நலனை செய்யாமல் கலைஞர் புகழை மட்டுமே முதல்வர் பாடிக்கொண்டு இருக்கிறார். பேனா சிலையை சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளலாம். தவறு செய்யவில்லை என்றால் பொன்முடி நிரூபிக்கட்டும்.
இயற்கை வளங்களை சுரண்டி கோடிகோடியாய் குவித்து வைத்துள்ள பொன்முடி மீது அமலாக்கத்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. எங்கள் மீது வழக்குபோட்டுபோல சட்டப்படி எதிர்கொண்டோம். திமிரு.. கொழுப்பு.. ஆணவம் கொண்ட திமுகவினருக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது.” என்றார்.