Homeசெய்திகள்தமிழ்நாடுகோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்

-

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்

எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத்திட்டத்தை மழுங்கடிக்கவே காலை சிற்றுண்டி திட்டத்தைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு பள்ளிகளில் செயல்பட்டுவரும் எம்ஜிஆர் சத்துணாவு திட்ட விளம்பரத்தை மறைத்து, அதன்மீது தற்போதைய முதலமைச்சர் காலை திட்டத்தை விளம்பரம் செய்கிறார்கள் என்றும், இந்த மழுங்கடிப்பை தடுத்து நிறுத்தி விளம்பரம் செய்யவதை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.

அதன்பின்செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ காலை சிற்றுண்டி திட்டதிற்கு பிள்ளையார் சுழி போட்டதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவு திட்ட பலகைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அகற்றப்படுகின்றன. எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவுத்திட்டத்தை மழுங்கடிக்கவே காலை சிற்றுண்டி திட்டத்தைக் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கோடநாடு விவகாரத்தில் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணாவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல” என்றார்.

MUST READ