Homeசெய்திகள்தமிழ்நாடுபொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

-

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார்- ஜெயக்குமார்

பொன்முடி மீதான வழக்கில் சாட்சிகளை பாதுகாக்க திமுக சார்பிலான அரசு வழக்கறிஞர் தவறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்பின், “அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் செம்மண் எடுத்து இயற்கை வளத்தை சூறையாடி அரசுக்கு 28 கோடி ரூபாயை திமுக ஆட்சியில் இழப்பு ஏற்படுத்தியதால் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை சரிவர விபரம் கோராமல், பாதுகாக்காததால், இயற்கை வளத்தை சூறையாடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதால் அதிமுக சார்பில் நான் இவ்வழக்கில் என்னை இணைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, ஏன் வழக்கில் இணைந்துக்கொண்டேன் என்பது குறித்து விளக்கம் அளித்தேன்.

இயற்கை வளத்தை சூறையாடுவோருக்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும் வகையில் இவ்வழக்கின் தீர்ப்பு இருக்க வேண்டும். இன்று திமுக அரசு இருப்பதால், அரசு வழக்கறிஞர் தவறாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதனால் பலர் பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இயற்கையை அழித்துவிட்டு மனிதர்கள் எப்படி வாழ முடியும்? அதனால் தான் இந்த வழக்கில் இணைந்துள்ளேன். மாலை 3.45க்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு கூட்டணி பற்றியோ, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றியோ பேசுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.

MUST READ