பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணித்தலைவர் தடா பெரியசாமி இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள சமுக வலைதள பதிவில், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. v@EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (30.3.2024- சனிக் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணித் தலைவர் திரு. தடா பெரியசாமி அவர்கள் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தார். இந்நிகழ்வின்போது. கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் திரு. C.T.R. நிர்மல்குமார் அவர்களும் உடன் இருந்தார்.