சென்னையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூபாய் 2 கோடியே 85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பி.எல்.ஆர்.புளு மெட்டல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 65 லட்சம் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!
பல்லாவரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் லிங்கராஜின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூபாய் 2 கோடியே 20 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். திருநீருமலையில் இவருக்கு சொந்தமான கிரெசரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் வருமான வரி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.