
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (செப்.25) மாலை 04.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!
கூட்டத்தில், அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் கழக உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
2023 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்தும், கட்சியின் அடுத்தப் பணிகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக விவாதிக்கும் எடப்பாடி பழனிசாமி, முக்கிய முடிவுகளைக் கூட்டத்தில் எடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.