- Advertisement -
கோவில் திருவிழாவில் சலங்கை ஆட்டம் ஆடிய அதிமுக எம்.எல்.ஏ
பெருந்துறை அதிமுக சட்டமன்ற ஜெயக்குமார் கோவிலில் சலங்கை ஆட்டம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளர் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினராகவும் உள்ள ஜெயக்குமார் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கோவில் நிருவிழாக்களில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கம்புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அங்கு கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான சலங்கையாட்டம் நடைபெறுவதை கண்டு உற்சாகமடைந்தார். மேலும் 10 கிலோ எடை கொண்ட சலங்கையினை காலில் கட்டி கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நடனமாடியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரபட்டு வருகிறது.