- Advertisement -
ஈபிஎஸ் குணத்தை தொண்டர்கள் புரிந்து கொண்டனர்- ஓபிஎஸ்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட அவரின், கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். முன்னாள் முதலமைச்சருக்கே இந்த நிலையா என மக்கள் கவலையில் உள்ளனர்.
மன்னிப்பு கடிதம் தர வேண்டும் என கூறியதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் குணத்தை தொண்டர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தென்காசியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.