Homeசெய்திகள்தமிழ்நாடு"மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்"- புகழேந்தி

“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி

-

- Advertisement -

“மது விலையை உயர்த்தியவர் ஈபிஎஸ்”- புகழேந்தி

பணம் உள்ளவர்கள் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

pugalendhi

சேலம் எடப்பாடி பழனிசாமியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அதனை தடுக்க தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். கொரோனா காலத்தில் மது விலையை உயர்த்தியவர் எடப்பாடி பழனிசாமி. துணையாக இருந்தவர் தங்கமணி, ஆளுநர் மாளிக்கை சென்று ஈபிஎஸ் மனு அளிக்கும்போது நானும் மனு அளிப்பேன். பணம் உள்ளவர்கள் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடிக்கிறார்கள், பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் அருந்துகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. தேர்தல் ஆணைய செயலாளர் எழுதிய கடிதத்தில், கட்சி, சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம் எனக் கூறியவில்லை. அதிமுக தொண்டர்கள் அடித்துக்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தூண்டிவிடுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.

MUST READ