Homeசெய்திகள்தமிழ்நாடுஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்

-

- Advertisement -

ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன்?- எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐபிஎல் டிக்கெட் கேட்டது ஏன் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சட்டமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் மீதும் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்படாததால், எதிர்க்கட்சி கொறடா என்ற முறையிலும், விளையாட்டு துறை மானிய கோரிக்கையின் போதுதான் கேட்க முடியும் என்பதாலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிஎல் போட்டிகளுக்கான பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டேன். மேலும் ஐபிஎச்ல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. சட்ட விரோத டிக்கெட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ