Homeசெய்திகள்தமிழ்நாடுஅ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

அ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

-

 

eps

அ.தி.மு.க.வின் அமைப்பு மாவட்டங்கள் 75- லிருந்து 82 ஆக உயர்த்தப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

‘லவ் யூ டூ ஷாருக் சார்’….. ஜவான் பட வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த விஜய்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அமைப்பு மாவட்டங்கள் 75- லிருந்து 82 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக சீனிவாசன் என்பவரும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அ.தி.மு.க. மத்திய மாவட்டச் செயலாளராக பொறுப்பு பெண் நிர்வாகிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜெயசுதா, அந்த மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளராக மோகன், தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

குக் வித் கோமாளி புகழ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் குட்டி பாப்பா!

ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ