Homeசெய்திகள்தமிழ்நாடு"விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது"- நீதிபதி வேதனை!

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

-

 

"கோயில்களில் அறங்காவலராக அரசியல்வாதியை நியமிப்பதை நிறுத்துங்கள்"- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Photo: Chennai High Court

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவுச் செய்திருக்கிறது.

“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, என்எல்சி நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “20 ஆண்டுகளாக நிலத்தின் உரிமையை எடுத்துக் கொள்ளாமல், காத்திருந்தவர்கள் பயிரை அறுவடைச் செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா?

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

நெல் வயலில் புல்டோசர் கொண்டு கால்வாய் தோண்டும் பணிகளைப் பார்க்கும் போது, அழுகை வந்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளது. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது” என்று நீதிபதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

MUST READ