Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை நிதிநிலை அறிக்கை - முத்தரசன் வரவேற்பு

வேளாண்மை நிதிநிலை அறிக்கை – முத்தரசன் வரவேற்பு

-

வேளாண்மை நிதிநிலை அறிக்கை – முத்தரசன் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வரவேற்றுள்ளார்.

இரா. முத்தரசன் வெளிட்யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். வேளாண்மை நிதிநிலை அறிக்கை மகிழ்ந்து வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், வேளாண் துறை வல்லுநர்களின் கருத்துக்களை அமைச்சர் நேரடியாக கேட்டறிந்தும், கருத்து கேட்புக் கூட்டங்களில் வந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .‌

தமிழ்நாட்டில் இயங்கி வரும் நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை இந்த மாநிலத்திலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் திட்டம், முக்கிய வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி எல்லா காலங்களிலும் சீராக கிடைக்க வழி செய்வது, அதிகமாக விளையும் பயிர்களை கருத்தில் கொண்டு அவைகளை மதிப்புக்கூட்டி மேம்படுத்தும் தொழில்களை தொடங்குவது, விவசாயிகளுக்கு ஆலோசனை கூற வட்டாரத்துக்கு ஒரு விஞ்ஞானி நியமனம் செய்வது என்று பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரும்பு, நெல் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஊக்குவிப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு அறிவித்துள்ள ஊக்கத்தொகை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், விவசாய கிணறுகளுக்கான மின் இணைப்பு மும்முனை மின்சாரம் வழங்கல், நீர்வளத்துறை மேம்பாடு, அங்க வேளாண்மை ஊக்குவிக்க “நம்மாழ்வார் விருது” பயிர் கடன் வழங்க நிதி, வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம், 10 லட்சம் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் காலநிலை சீரமைப்புக்கு உதவுவது என அனைத்து தரப்பினரும் மகிழ்ந்து வரவேற்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், வேளாண்மை உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

MUST READ