வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்.
வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20-க்கு பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உயிர் பிரிந்தது. வேளாண் சார்ந்த ஆராய்ச்சிக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன். வேளாண்மையில் புரட்சி செய்தவர் என்ற பெயர் இருந்தாலும், ஒட்டு ரக விதைகளையும், மரபணு மாற்று விதைகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் எம்.எஸ். சுவாமிநாதன் பணியாற்றியுள்ளார். பத்மவிபூஷன், எஸ்.எஸ். பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் எம்எஸ் சுவாமிநாதன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1925ல் கும்பகோணத்தில் பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயம், உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்.