Homeசெய்திகள்தமிழ்நாடுஇபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்

இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்

-

- Advertisement -
edappadi palanisamy
edappadi palanisamy

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

ஓபிஎஸ் அணியில் உள்ள மருது அழகுராஜ் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்குகள், விவகாரங்கள் எல்லாமே ஆரம்பத்தில் அவருக்கு எதிராக இருந்தாலும் கடைசியில் முடிவு அவருக்கு சாதகமாகவே அமைந்து விடுகின்றன . இது என்ன மாயம் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

kc

அதே மாதிரி தான் அதிமுக பொதுக்குழு , அதிமுக பொதுச் செயலாளர் , அதிமுக சட்ட விதிகள் திருத்தம் ஆகிய அனைத்திலும் எடப்பாடிபழனிச்சாமிக்கு சாதகமானதாகவே எல்லாம் அமைந்து விடுகின்றன . அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்சியின் சட்ட திட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது மேலும் உறுதியாக இருக்கிறது.

இதற்கிடையில் பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் இருவரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்மையில் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இந்த சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது, அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை வழிநடத்துவோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துடன் செயல்படுகின்றார் என்று கூறி இருந்தார்.

பன்னீர்செல்வம் -தினகரன் இணைந்தது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பான நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற இருக்கிறது . எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் சட்டதிட்ட விதிகளில் செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்காக என்ன வியூகங்களை வகுக்கலாம். பன்னீர்செல்வம் – தினகரனை எதிர்கொள்வதற்கு என்ன மாதிரியான வியூகங்களை வகுக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

MUST READ