Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம்? - அதிரடி காட்டும் இபிஎஸ்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு மாற்றம்? – அதிரடி காட்டும் இபிஎஸ்!

-

- Advertisement -

அதிமுக முடிவு

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தமிழகத்தை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி அமோ வெற்றி பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றியை பெற்றது. அதிமுக மற்றும் பாஜகவிற்கு ஒரு தொகுதிகள் கூட கிடைக்கவில்லை. 3 முதல் 5 இடங்களில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஒரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவே இந்த படுதோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
Photo: ADMK

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கடும் அதிருப்தியில் உள்ள எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதிம் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களை பீதியடைய செய்துள்ளது.

MUST READ