கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு , வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர்களும் மாற்று கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தனக்கு எம்பி சீட் வழங்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலத்தில், அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எவ வேலு, திமுக பொருளாளர் டிஆர் பாலு ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.