Homeசெய்திகள்தமிழ்நாடுவக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - தலைமை நீதிபதி...

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

-

- Advertisement -

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சில வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனா். அனைத்து வழக்குகளும் முறைப்படி பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக இதுவரை 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க கட்சி தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு ஏற்றது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனா்.

ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு தனது தரப்பு மனுவையும் பட்டியலிட்டு விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்பு முறையீடு செய்யபட்டுள்ளது தொடர்பாக பதிவாளரிடம் கொடுத்த அனைத்து மனுக்களுக்கும் உரிய விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முறையீடு தொடர்பான கோரிக்கை கொடுக்கப்பட்டு, இன்று முறையீட்டுக்கு பட்டியலிடப்படாத மனுக்கள் தொடர்பாக பதிவாளரை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வக்பு விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அன்று அந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

MUST READ