நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என சீட்டு கொடுத்து கட்சியின் நிர்வாகிகளின் கருத்துக்களை ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.
“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், இன்று (பிப்.12) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறியும் வகையில், கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.+பா.ஜ.க., அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க. என குறிப்பிடப்பட்டிருந்த சீட்டுகளை வழங்கிக் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பாஐகவின் அசிங்க அரசியலுக்கு இதைவிட என்ன சான்று தேவை? – மனோ தங்கராஜ் கேள்வி
பின்னர் கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன் எம்.பி., “கூட்டணி என்பது அவசியமானது; ஆனால் தேர்தலுக்கானது மட்டுமே; நிரந்தரமானது அல்ல. பா.ஜ.க., அ.தி.மு.க. என இரு கட்சித் தலைவர்களும் நம் மீது எதிர்பார்ப்போடு உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மற்ற கூட்டணிக் கட்சிகளின் செயல்பாட்டை நாம் கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.