Homeசெய்திகள்தமிழ்நாடு"கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்"- பா.ஜ.க. தலைமை உத்தரவு!

“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!

-

- Advertisement -

 

"கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்"- பா.ஜ.க. தலைமை உத்தரவு!
BJP

பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சி.டி.ரவி, “இன்னும் எட்டு மாதங்கள் தேர்தலுக்கு இருக்கிறது; அதில் என்ன நடக்கும் என்று தெரியாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைப் பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வைப் பலப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை” எனத் தெரிவித்தார்.

முறிந்தது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி!

பா.ஜ.க.வின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம். பட்டாசு வெடிக்கவும் கூடாதென உத்தரவிட்டுள்ளார்.

MUST READ