சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்.08) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சந்தித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மகளிர் நலத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு வழங்கினர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், “வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். அக்.11- ஆம் தேதி காவிரி டெல்டாவில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் சேர எந்த அழைப்பும் வரவில்லை; வந்தாலும் சேர மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.