Homeசெய்திகள்தமிழ்நாடு"கூட்டணி குறித்து டெல்லி தான் முடிவெடுக்கும்"- அண்ணாமலை திட்டவட்டம்!

“கூட்டணி குறித்து டெல்லி தான் முடிவெடுக்கும்”- அண்ணாமலை திட்டவட்டம்!

-

 

"கூட்டணி குறித்து டெல்லி தான் முடிவெடுக்கும்"- அண்ணாமலை திட்டவட்டம்!
Video Crop Image

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (அக்.05) காலை 10.00 மணிக்கு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு இயக்குனர் மிஸ்கின் வேண்டுகோள்

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களது விருப்பம். கூட்டணி பிரச்சனையில் எனது நிலைப்பாட்டை பா.ஜ.க. மேலிடத்தில் கூறிவிட்டேன். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். ஜனவரியில் நடைபெறும் என் மண்; என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாகக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “யாருக்கு பின்னடைவு? யாருக்கு முன்னடைவு? என இப்போது ஆராய விரும்பவில்லை. கன்னியாகுமரியில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க. வென்றிருக்கிறது. எங்கள் கட்சியிலும் கருத்துத் தெரிவிக்கத் தொண்டர்கள் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ