Homeசெய்திகள்தமிழ்நாடுஅமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனு தள்ளுபடி!

அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனு தள்ளுபடி!

-

- Advertisement -

 

அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனு தள்ளுபடி!
File Photo

பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனுவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன் கட்சிக் கொடிக்கம்பம் நடுவது தொடர்பான வழக்கில், பிணைக் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்பட ஐந்து பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு 100 அடி உயர கொடிக்கம்பம் நட, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அது தொடர்பாக, கடந்த அக்டோபர் 20- ஆம் தேதி பா.ஜ.க.வினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தடுக்கச் சென்ற காவல்துறையினருடன், பா.ஜ.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். அதில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக, பா.ஜ.க. பிரமுகர்கள் அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன், பாலகுமார், ரமேஷ் சிவா, பாலவினோத், குமார் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அவர்களில் ஐந்து பேர் பிணைக் கேட்டு நீதிமன்றத்தை நாடினர். அவர்களின் பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அமர் பிரசாத் ரெட்டி உள்பட ஐந்து பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

MUST READ