ஆந்திராவில் நடைபெற்ற பதவேற்பு விழா மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு மலர் கொத்து வழங்கி, கட்டி தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு அமைச்சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற பதவேற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித் ஷா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார். தமிழக பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் ஏற்பட்டு உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழிசையை அமித் ஷா கண்டித்துள்ளார்.