
இரண்டு நாள் பயணமாக, ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று அதிகாலை உலகப் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், அமித்ஷாவுக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா, விருந்தினர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.