Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது!

-

- Advertisement -

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே ஆர்ம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறி சரிந்து விழுந்தார். ஆம்ஸ்ட்ராங்கை தாக்கிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தப்பியோடிய கொலையாளிகளை தேடும் பணிகளையும் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

MUST READ