Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி தப்பியோட முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி தப்பியோட முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொலை

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை, செம்பியம் பகுதியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங். இவர் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அன்றிரவே 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். புழல் வெஜிடேரியன் பகுதியில் போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதால் போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் நாயர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ