வருவாய் துறை செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்-க்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. உள்துறை செயலாளராக இருந்த அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருவாய் துறை செயலாளராக உள்ள அமுதா ஐஏஎஸ்-க்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில், வருவாய்த்துறை செயலர் பி.அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக அமுதா ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக இருந்த டி.மோகன், உணவுப்பொருள் வழங்கல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.