Homeசெய்திகள்தமிழ்நாடுமயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

-

வாழப்பாடி அருகே மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டத்தில் மயில்களுக்கு உணவு வழங்கி மருத்துவர் பெருமிதம் கொண்டுள்ளார்.

மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்யாணகிரி ஊராட்சியில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில் மருத்துவர் வெற்றிச்செல்வன் வயது 70 என்பவர் வசித்து வருகிறார்.

இவர் பள்ளி மாணவர் பருவத்தில் லண்டனில் மருத்துவ படிப்பு பயின்று பின்னர் தமிழ்நாட்டில் நீலகிரியில் தனியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவர் தற்பொழுது சொந்த ஊரான கல்யாண கிரி ஊராட்சியில் சில ஆண்டுகளாக விவசாய தோட்டத்தில் வசித்து வருகிறார்.

மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்

இவர் 70 வயதை கடந்த நிலையில் இவரது விவசாய தோட்டத்தில் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்ட நிலையில் தென்னை மற்றும் பாக்கு, மா மரங்களும் சூழ்ந்த இடமாக அருகே வசிஷ்ட நதி இருப்பதால் இயற்கையான சோலைவனம் போல் காட்சியளிப்பதால் அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் அங்கே வாழ்ந்து வருகிறது.

அந்த மயில்களுக்கு இவர் உணவு வழங்கி வருகிறார். மேலும் நேற்று ஒரே நேரத்தில் ஐந்து மயில்கள் தோகை விரித்து ஆடியது அப்பகுதியில் செல்லும் கொட்டவாடி, ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்து கண்டுகளித்தனர்.

பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் வைரல் 

வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மயில்கள் தற்போது வாழ்ந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வட தமிழ் நாடு பகுதிகளில் எங்கும் காணாத மயில்கள் தற்பொழுது குடியேறி வருகின்றது.

குறிப்பாக தென் தமிழகத்தில் இந்த மயில்கள் அதிகம் வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது வட தமிழகத்திலும் எங்கும் மயில்களாக காட்சியளித்து வருகிறது என்பதும் மயில்கள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனால் ஆங்காங்கே மழைப் பகுதிகளில் விவசாயத் தோட்டப்பகுதிகளில் மயில்கள் தோகை விரித்து ஆடும் காட்சிகள் ஆங்காங்கே பொதுமக்கள் கண்டு கழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ